நரேந்திர மோடி 
இந்தியா

நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட்: பிரதமர் மோடி உரை

நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

DIN

நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வளமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மேலும், வருமான வரியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து மக்களும் பயன்பெறும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

பட்ஜெட் 2023 குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அம்ரித் கால் முதல் பட்ஜெட், வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.

ஏழை மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

பசுமை ஆற்றல் ஊக்குவிப்பு, பசுமை வளர்ச்சி, பசுமையான உள்கட்டமைப்பு, வேளாண்மை போன்றவற்றுக்கான பட்ஜெட் அறிவிப்பு நிலைத்தன்மையுடைய எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். 

பட்ஜெட் அறிவிப்புகள் நடுத்தர, கிராமப்புற பெண்களுக்கு மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். அவர்களின் வளர்ச்சிக்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு பட்ஜெட் அறிவிப்புகள் உதவும். வீடுகளில் பெண்களின் மேம்பாட்டை உறுதிசெய்யும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தொழில் நுட்பம் மற்றும் புதிய பொருளாதாரத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

SCROLL FOR NEXT