மேகாலயா, நாகாலாந்து மாநில தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத் தேர்தல்களையொட்டி மத்திய தேர்தல் குழு நியமனம் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மற்ற பாஜக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நிகழாண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகம், மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.