முகப்பு
இந்தியா

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டஉச்சவரம்பு இரு மடங்காக உயா்வு- ரூ.30 லட்சம் வரை நிரந்தர வைப்புக்கு அனுமதி

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான உச்சவரம்பு பட்ஜெட்டில் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:24 AM
பகிர்:

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கான உச்சவரம்பு பட்ஜெட்டில் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.

இதன்படி மூத்த குடிமக்கள் இனி ரூ.30 லட்சம் வரை நிரந்தர வைப்பில் வைத்துக் கொள்ள முடியும். முன்பு இந்த உச்சவரம்பு ரூ.15 லட்சமாக இருந்தது.

இது தொடா்பாக பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்ட உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

இதேபோல அஞ்சலக நிரந்தர வைப்பில் பணத்தை வைத்து மாதம்தோறும் வட்டி பெறும் திட்டத்தில் உச்சவரம்பு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இதுவே இரு நபா்கள் உள்ள இணைப்புக் கணக்கில் ஏற்கெனவே உள்ள உச்சவரம்பான ரூ.9 லட்சம், ரூ.15 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

இந்த அறிவிப்பு வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →