இந்தியா

குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: அசாம் முதல்வர் 

மாநிலத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடரும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

DIN

மாநிலத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடரும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "காலை 8 மணி வரை, மாநிலத்தில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக சுமார் 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும். டிஜிபி மாலையில் பத்திரிகையாளர்களிடம் இதுதொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்வார். 

இப்போதே, என்னிடம் கூட விவரங்கள் இல்லை. மாலைக்குள், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு எதிராக நாங்கள் எடுத்த நடவடிக்கை பற்றிய தெளிவான விவரங்கள் வெளிவரும். மாவட்ட வாரியாக செய்யப்பட்ட கைதுகளும் மாலையில் டிஜிபியால் பகிரப்படும்" என்று முதல்வர் மேலும் கூறினார்.

அசாம் முதல்வர் சர்மாவின் வழிகாட்டுதலின்படி, குழந்தை திருமணத்திற்கு எதிரான மாநிலம் தழுவிய நடவடிக்கை வியாழக்கிழமை இரவு தொடங்கப்பட்டது. குழந்தைத் திருமணம் என்ற தீய பழக்கத்தை மாநிலத்தில் இருந்து அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபர் புதினுடன் மோடி சந்திப்பு!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்! 250 பேர் பலி?

பஞ்சாபில் வெள்ளம்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு செப். 3 வரை விடுமுறை

வாரத்தின் முதல்நாள்: உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT