இந்தியா

பாட்னா செல்லவிருந்த பயணி தவறுதலாக உதயப்பூரில் தரையிறக்கம்: விசாரணைக்கு உத்தரவு!

தவறுதலாக உதய்பூர் வந்திறங்கியதாக அந்தப் பயணி தெரிவித்ததை அடுத்து, இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள், அவரை அதே நாளில் தில்லி சென்ற மற்றொரு விமானத்தில் அனுப்பி வைத்தனர். 

DIN


புதுதில்லி: தில்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் பாட்னா செல்ல வேண்டிய பயணி ஒருவர், அந்த விமானத்தின் மற்றொரு விமானத்தில் ஏறி, சுமார் 1400 கிமீ தொலைவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்குச் சென்ற விமானத்தில் ஏறியது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், தவறுதலாக உதய்பூர் வந்திறங்கியதாக அந்தப் பயணி தெரிவித்ததை அடுத்து, இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள், அவரை அதே நாளில் தில்லி சென்ற மற்றொரு விமானத்தில் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்சர் ஹுசைன் என்ற பயணி, இண்டிகோ விமானம் 6E-214 வழியாக பாட்னாவுக்கு டிக்கெட் பதிவு செய்து, திட்டமிடப்பட்ட விமானத்தில் ஏற ஜனவரி 30 ஆம் தேதி தில்லி விமான நிலையத்தை வந்தடைந்தார். ஆனால், அவர் தவறுதலாக உதய்பூர் செல்லும் இண்டிகோவின் 6E-319 விமானத்தில் ஏறினார்.

உதய்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகுதான் பயணி தவறை உணர்ந்தார்.

பின்னர் அவர் உதய்பூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார், பின்னர் இந்த விவகாரம் குறித்து விமான நிறுவனம் எச்சரிக்கப்பட்டது. 

விமான நிறுவனம் அவரை அதே நாளில் தில்லிக்கும், பின்னர் ஜனவரி 31 ஆம் தேதி பாட்னாவுக்கும் விமானத்தில் அனுப்பி வைத்தது. 

இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து நாங்கள் அறிக்கை கோரியுள்ளோம், விமான நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், விசாரணையில், பயணிகளின் போர்டிங் பாஸ் முழுமையாக ஸ்கேன் செய்யப்படாதது ஏன் என்றும், விமானம் புறப்படுவதற்கு முன்பாக அந்தப் பயணியின் போர்டிங் பாஸ் இரண்டு முறை சரிபார்க்கப்பட்ட போதும், அவர் தவறுதலாக விமானத்தில் ஏறியது ஏப்படி  என்பதையும் கண்டுபிடித்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

இந்நிலையில், விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "6E-319 தில்லி - உதய்பூர் விமானத்தில் பயணி ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் எங்களது கவனத்திற்கு வந்துள்ளது."

"இந்த விஷயத்தில் நாங்கள் அதிகாரிகளுடன் விசாரணையில் ஈடுபட்டுள்ளோம். கவனக்குறைவு குறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்," என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT