இந்தியா

உ.பி.யில் ரோந்துப் பணியின்போது காவலர் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல்: 2 காவலர்கள் காயம்

உத்தர பிரதேசத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். 

DIN

உத்தர பிரதேசத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வாகனம் மீது மர்ம நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். 

உத்தர பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் காவலர் வாகனத்தில் நேற்று காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிராமணிபுரா பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் காவலர் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்தனர். 

இரண்டு காவலர்களுக்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவர்கள் பஹ்ரைச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் கண்காணிப்பில் உள்ளார். பலத்த காயமடைந்த காவலரின் பெயர் அபிவீர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர்களின் பெயர்களை காவலர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT