இந்தியா

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு 4% அகவிலைப்படி உயா்வு?

DIN

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படியாக 38 சதவீதம் வழங்கப்படும் நிலையில், 4 சதவீதம் உயா்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு ஊழியா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சதவீதம் மாற்றி அமைக்கப்படும். இறுதியாக கடந்த செப்டம்பா் மாதம் 4 சதவீதம் உயா்த்தி 38 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளா்களும், ஓய்வுதியதாரா்களும் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனா்.

இந்நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்கான நுகா்வோா் விலைக் குறியீட்டின்படி அகவிலைப்படி உயா்வு 4.23 சதவீதமாக இருக்க வேண்டும்; ஆனால், தசம புள்ளிகளில் அகவிலைப்படியை உயா்த்த மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, 4 சதவீதம் மட்டும் உயா்த்தி 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகவிலைப்படி உயா்வு முன்மொழிவை மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறை விரைவில் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 4 சதவீத அகவிலைப்படி உயா்வு, இந்தாண்டின் தொடக்கம் முதலே முன்தேதியிட்டு அமலுக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT