இந்தியா

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்த மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ 

DIN

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

மேற்கு வங்க மாநிலம், அலிபுர்துவார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுமன் கஞ்சிலால். இவர், கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி அலுவலகத்துக்கு சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

2021 பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸில் இணைந்த ஆறாவது பாஜக எம்எல்ஏ இவர் ஆவார்.

]இதன் மூலம் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 68 ஆக குறைந்துள்ளது. திரிணமூல் வெளியிட்டுள்ள அறிக்கையில். பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளை நிராகரிப்பதற்காகவும், முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையிலான வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பதற்காகவும் கஞ்சிலால் தங்களுடன் இணைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்கத்தில் விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சுமன் கஞ்சிலால், திரிணமூல் காங்கிரஸில் இணைந்திருப்பது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருத்தப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT