இந்தியா

துருக்கி நிலநடுக்கம்: இந்தியாவில் இருந்து 100 மீட்புப் படை வீரர்கள் விரைவு!

துருக்கி நிலநடுக்கத்தை மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 2 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

DIN

துருக்கி நிலநடுக்கத்தை மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 2 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பேரிடரை தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் அதுல் கர்வால் கூறுகையில், இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு 51 வீரர்கள் கொண்ட குழுவும், காலை 11 மணிக்கு 50 வீரர்கள் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய விமானப் படையின் விமானம் மூலம் துருக்கிக்கு சென்றுள்ளனர்.

மேலும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், துளையிடும் இயந்திரங்கள், அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் 5 பெண் வீராங்கனைகள் உள்பட இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அது இது எது... ஷாலினி!

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

SCROLL FOR NEXT