இந்தியா

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு! கண்ணாடி சேதம்; பயணிகள் அச்சம்!

தெலங்கானாவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

DIN


தெலங்கானாவில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து விசாகப்பட்டிணம் நோக்கி வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டது. சென்றுக்கொண்டிருந்தது. 

மஹெபுபாபாத் அருகே செல்லும்போது மர்ம நபர்கள் ரயிலின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது. 

ரயில் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக அனைத்து விதங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் மற்றும் பெட்டியின் நிலை குறித்து ஆய்வு செய்து சேத மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது என தெற்கு மத்திய ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.  

வந்தே பாரத் ரயில் திட்டம் செகந்திராபாத் - விசாகப்பட்டிணம் இடையே கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

மோடி தொடக்கி வைத்து முழுதாக ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், ரயிலின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

SCROLL FOR NEXT