அப்பாவை பத்திரமா பாத்துக்கோங்க.. லாலுவின் மகள் உருக்கம்
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்யாதவுக்கு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற நிலையில், இன்று அவர் நாடு திரும்புகிறார்.
புது தில்லி: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்யாதவுக்கு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற நிலையில், இன்று அவர் நாடு திரும்புகிறார்.
லாலு பிரசாத் மகள் ரோஹிணி ஆச்சார்யாதான் தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்திருந்தார். இன்று லாலு பிரசாத் இந்தியா திரும்பும் நிலையில், ரோஹிணி ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஒரு முக்கியமான தகவலை சொல்ல வேண்டும். தலைவர் லாலு பிரசாத்தின் உடல்நிலை தொடர்பான தகவல் இது. பிப்ரவரி 11அம் தேதி சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்புகிறார். நான் அவரது மகளாக எனது கடமையை செய்துவிட்டேன். எனது தந்தை குணமாகிவிட்டார், உங்களிடம் எனது தந்தையை அனுப்பிவைக்கிறேன். எனது தந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
லாலு யாதவ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு மகள் ரோஹிணி ஆச்சார்யா தனது சிறுநீரகத்தை தானமளித்திருந்தார்.
74 வயதாகும் லாலு, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவருக்கு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது இந்தியா திரும்புகிறார்.