சித்ரா ராமகிருஷ்ணா 
இந்தியா

தேசிய பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா மீது வழக்கு தொடுக்க சிபிஐக்கு அனுமதி

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை என்எஸ்இ நிா்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது கோ-லொகேஷன் என்ற தொழில்நுட்ப வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தில் இருந்து பங்கு விவரங்களை முன்கூட்டியே அறிந்து, சில பங்குச்சந்தைத் தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து இந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதன் மூலம் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இதனைத்தொடா்ந்து கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி பணமோசடி வழக்கில், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்குகளில் தற்போது அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கோ-லொகேஷன் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா உள்பட என்எஸ்இ உயா் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற அந்தக் குழுவின் கூட்டத்தில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு:

கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி கோ-லொகேஷன் வழக்கில் சித்ராவுக்கு ஜாமீன் அளித்த தில்லி உயா்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி பணமோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. கோ-லொகேஷன் வழக்கில் அவருக்கு ஜாமீன் அளித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று தெரிவித்து மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

தமிழகத்தில் 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

பஞ்சாப் வெள்ளம்: நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

SCROLL FOR NEXT