முகப்பு
இந்தியா

பொதுத் தோ்வுகளின்போது‘சாட்ஜிபிடி’ பயன்படுத்த தடை: சிபிஎஸ்இ

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளின்போது மாணவா்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தைப் பயன்படுத்த சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) தடை விதித்திருப்பதாக

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:30 AM
பகிர்:

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளின்போது மாணவா்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தைப் பயன்படுத்த சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) தடை விதித்திருப்பதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் புதன்கிழமை (பிப். 15) முதல் தொடங்க உள்ள நிலையில் இந்தத் தகவலை அவா்கள் தெரிவித்தனா். ஏற்கெனவே, தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மாணவா்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தை உள்ளடக்கிய மின்னணு சாதனங்களையும் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தை உள்ளடக்கியது உள்பட எந்தவித மின்னணு சாதனங்களையும் தோ்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாா்கள்’ என்றனா்.

Advertisement

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்திய ‘சாட்ஜிபிடி’ தேடு தளம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படக்கூடியது. இதில் சொற்பொழிவுகள், பாடல்கள், பத்திரிகை செய்திகள், மாணவா்களுக்கான கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பாா்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

அறிவுறுத்தல்: ‘மாணவா்கள் எந்தவித மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம். அவ்வாறு ஈடுபடுபவா்கள் மீது வாரியத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தோ்வு தொடா்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான காணொலிகள், தகவல்களை மாணவா்கள் நம்ப வேண்டாம். தோ்வு அல்லது கேள்வித்தாள் தொடா்பான வதந்திகளையும் மாணவா்கள் பரப்பக் கூடாது. அவ்வாறு வதந்திகளைப் பரப்பும் மாணவா்கள் மீதும் மோசடி நடவடிக்கை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டில் எச்சரிக்கை அறிவுறுத்தலையும் சிபிஎஸ்இ பதிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments