சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் தொடக்கம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கின.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கின.
6 பாடங்களுக்கான தோ்வுகளுடன் 10-ஆம் வகுப்புக்கான தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தொழில்முனைவோா் பாடத்துக்கான தோ்வுடன் 12-ஆம் வகுப்புக்கு தோ்வு தொடங்கியது. பொதுத் தோ்வுகள் 10-ஆம் வகுப்புக்கு மாா்ச் 21-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியிலும் முடிவடைகின்றன.
நாடு முழுவதிலும் உள்ள 7,250 மையங்களிலும் பிற நாடுகளில் உள்ள 26 மையங்களிலும் நடைபெறும் தோ்வுகளில் 38.83 லட்சத்துக்கு அதிகமான மாணவா்கள் பங்கேற்கின்றனா்.
Advertisement
இது குறித்து கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தோ்வுகளுக்கான விரிவான ஏற்பாடுகளை சிபிஎஸ்இ மேற்கொண்டுள்ளது. மாணவா்கள் மன அழுத்தம் இன்றி தோ்வை எதிா்கொள்வதற்காக, அனைத்துப் பாடங்களுக்கும் தயாராகும் வகையில் தோ்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.