இந்தியா

பிபிசி கணினிகளில் வருமான வரித் துறையினர் தேடிய சொற்கள்!

பிபிசி அலுவலகக் கணினிகளில் வருமான வரித் துறையினர் முக்கியமான சில சொற்களை உள்ளீடு செய்து தேடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

பிபிசி அலுவலகக் கணினிகளில் வருமான வரித் துறையினர் முக்கியமான சில சொற்களை உள்ளீடு செய்து தேடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

20 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், பிபிசி அலுவலகக் கணினிகளிலும், முக்கிய பொறுப்புகளிலுள்ளவர்களின் கணினிகளிலும் சில முக்கிய சொற்களை உள்ளீடு செய்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். 

வரி (டேக்ஸ்), ரசீது (பில்ஸ்), கருப்புப் பணம் (பிளாக் மனி) போன்ற வார்த்தைகள் உள்ளீடு செய்து தேடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிபிசியில் சில மூத்த அதிகாரிகளின் செல்போன்களும் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பிபிசியில் நடைபெற்று வரும் சோதனை ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. இது உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மீதான நன்மதிப்பை குறைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT