இந்தியா

3 மாநிலத் தேர்தல்: 20 மடங்காக அதிகரித்த பணப் பறிமுதல்!

DIN

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களான திரிபுரா, மேகலாயா மற்றும் நாகலாந்தில் போதைப் பொருட்கள், மது மற்றும் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 20 மடங்காக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தமாக ரூ.147 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் இன்று (பிப்ரவரி 16) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்குப் பகுதி நடைபெற்று வருகிறது. மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் போதைப் பொருட்கள், மது மற்றும் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 20 மடங்காக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
 

இது குறித்துத் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை கண்காணிக்கப்பட்டது. அதன் விளைவாக இதுவரை ரூ.14.12 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள், மது மற்றும் பணம் பறிமுதல் செய்யப்படுவது 2018 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலைக் காட்டிலும் 20 மடங்கு அதிகரித்துள்ளது. பேரவைத் தேர்தல் நடைபெறும் மூன்று மாநிலங்களையும் சேர்த்து மொத்தமாக ரூ.147.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குழுக்களால் ரூ.7.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

திரிபுராவில் போதைப்பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவைகளின் பரவலை கருத்தில் கொண்டு மாவட்டக் காவல் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை திரிபுராவில் ரூ.9.27 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு திரிபுராவில் ரூ.3.75 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. வடக்கு திரிபுராவில் ரூ.1.10 கோடி மதிப்பிலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT