பாகிஸ்தானின் குவெட்டாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பெஷாவரில் இருந்து குவெட்டா நோக்கிச் சென்ற ஜாஃபர் விரைவு ரயில் சிச்சாவத்னி ரயில் நிலையத்தைக் கடக்கும்போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜனவரி 30 அன்று ஜாஃபர் விரைவு ரயிலைக் குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. இதில் எட்டு பயணிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஜாஃபர் விரைவு ரயிலில் இரண்டாவது சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.