இந்தியா

'மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் இதுதான் நடக்கிறது' - நிதிஷ் குமார் ஆவேசம்!

யாராவது மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

DIN

யாராவது மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பிபிசி நிறுவனங்களில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற வருமானவரித்துறை ஆய்வு குறித்துப் பதில் அளித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், அவர்கள் (மோடி அரசு) என்ன விரும்புகிறார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், மோடி அரசுக்கு எதிராக யாராவது பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிகிறது. 

எங்களுக்கு எதிராக பேசவும் எழுதவும் விரும்புபவர்கள் அவ்வாறு செய்ய முடியும். ஆனால், இறுதியில் பொதுமக்கள்தான் முடிவு செய்வார்கள்' என்றார். 

மேலும், 'பிகாரில் அனைத்து மதத்தினரும் அனைத்து பிரிவினரும் வாழ்கின்றனர். ஒருவர் இந்தியாவை 'இந்து-ராஷ்டிரா'வாக ஆக்க விரும்பினால் இந்தியாவை அளிக்க நினைக்கிறார் என்றுதான் அர்த்தம். தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை மட்டுமே நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் காந்திஜியின் பாதையில் செல்வோம்' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT