முகப்பு
இந்தியா

ம.பி.யில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலி, 35 பேர் காயம்

மத்திய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:32 AM
கோப்புப்படம்
பகிர்:

மத்திய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இருந்து பயணிகள் பேருந்து இன்று காலை சத்தர்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது சாகர்-சத்தர்பூர் நெடுஞ்சாலையில் உள்ள நிவார் காதி பகுதியில் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

எனினும் இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். 35 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சாகர் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்த பயணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →