இந்தியா

ஜார்க்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு! 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பதவியேற்றார். 

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பதவியேற்றார். 

நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதன்படி, இன்று ஆளுநர் மாளிகையில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், ராதாகிருஷ்ணனுக்கு(65) பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். 

பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஹேமந்த் சோரன், அமைச்சரவை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர். 

ஜூலை 2021 முதல் ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றிய ரமேஷ் பாயிஸுக்குப் பிறகு ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுள்ளார். முன்னதாக, இரண்டு முறை மக்களவை உறுப்பினராக ராதாகிருஷ்ணன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT