கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திரத்தில் லாரி-கார் மோதி கோர விபத்து: சிறுமி உள்பட 5 பேர் பலி

 ஆந்திரத்தில் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 9 வயது சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர்.

DIN


பாபட்லா:  ஆந்திரத்தில் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 9 வயது சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திரம் மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் சனிக்கிழமை இரவு சைனாகஞ்சம் மண்டலம் சோபிராலில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு இரவு 11.30 மணியளவில் தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது, பாபட்லா மாவட்டம் மேடராமெட்லா பகுதியில் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 9 வயது சிறுமி, 3 பெண்கள் மற்றும் ஓட்டுநர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. 

இந்த கோர விபத்துக்கான உண்மையான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உயிரிழந்தவர்கள் பெயர் விவரம்: ஷேக் வஹீதா வாலி (38), ஷேக் ஆயிஷா ஹுமேராவலி (9), குருஜலா ஜெயஸ்ரீ (50), குருஜாலாவைச் சேர்ந்த திவ்யா தேஜா (29), கொண்டமுடி வீர பிரம்மசாரி (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

SCROLL FOR NEXT