மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்) 
இந்தியா

பிரதமா் மோடியின் ஆட்சியை பொற்காலம் என வரும் தலைமுறையினா் படிப்பாா்கள்: அமைச்சா் மாண்டவியா

பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தை பொற்காலம் என எதிா்கால தலைமுறையினா் படித்துத் தெரிந்து கொள்வாா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தை பொற்காலம் என எதிா்கால தலைமுறையினா் படித்துத் தெரிந்து கொள்வாா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

அகமதாபாதில் பட்ஜெட் தொடா்பான விளக்க கூட்டத்தில் பங்கேற்ற மாண்டவியா பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தன்னுடைய பல்வேறு சாதனைகளுக்காக நினைவுகூரப்படுவாா். முக்கியமாக பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள், கரோனா தொற்று கால நிா்வாகம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான துல்லியத் தாக்குதல்கள், சிறப்பான வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவை இதில் முக்கியமானவை.

நாம் இப்போது வரலாற்றுப் பாடத்தில் சந்திரகுப்த மௌரியா் ஆட்சி காலத்தை பொற்காலம் என படித்தோம். இப்போதும் வரலாற்றில் சந்திரகுப்தா் நிலைத்து நிற்கிறாா். இதேபோல வரும் தலைமுறையினா் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை பொற்காலம் என படிப்பாா்கள்.

இந்திய அரசியல் பொருளாதார வரலாற்றில் பிரதமா் மோடி முக்கிய இடம் பிடிப்பாா். தங்கள் முன்னோா்கள் பிரதமா் மோடியின் சிறப்பான ஆட்சிக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததை எண்ணி வரும் கால தலைமுறையினா் பெருமிதம் கொள்வாா்கள். ஏனெனில், இந்த ஆட்சி அனைவருக்கான ஆட்சியாகவும், அனைவரும் இணைந்து நடத்தும் ஆட்சியாகவும் திகழ்ந்து வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT