இந்தியா

பிகார்: மொபைல் போனை விழுங்கிய சிறைக் கைதி

பிகார் சிறையில் அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து கைதி ஒருவர் மொபைல் போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பிகார் சிறையில் அதிகாரிகளின் சோதனைக்குப் பயந்து கைதி ஒருவர் மொபைல் போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிகார், மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நேற்று அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை சிறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அதிகாரிகளுக்குப் பயந்து மொபைல் போனை விழுங்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள் உடனடியாக கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கைதி வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் வெளிநாட்டு துகள்கள் இருப்பது தெரியவந்தது என்று கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த கைதி மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிறைக் கைதி ஒருவர் மொபைல் போனை விழுங்கிய சம்பவம் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT