தில்லியில் இருந்து கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் இருந்து ஒடிசா கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாதில்லியில் இருந்து கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் இருந்து ஒடிசா கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் இருந்து ஒடிசா கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் 6இ 6191 என்ற விமானம் தலைநகர் தில்லியிலிருந்து ஒடிசா மாநிலம் தியோகார் விமான நிலையத்திற்கு இன்று காலை கிளம்பியது.
விமானம் கிளம்பிய சிறுது நேரத்திலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து, உடனடியாக விமானத்தை லக்னெள விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பகல் 12.20 மணியளவில் லக்னெள விமான நிலையம் வந்த இண்டிகோ விமானத்தை தனிப் பகுதியில் நிறுத்தி, தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இண்டிகோ விமானம் தியோகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.