முகப்பு
இந்தியா

உடுப்பி ஸ்ரீகிருஷ்ண மாதா கோயிலில் நட்டா வழிபாடு!

கர்நாடகத்தின் உடுப்பில் உள்ள ஸ்ரீகிருஷ்ண மாதா கோயிலில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வழிபாடு செய்தார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:33 AM
பகிர்:

கர்நாடகத்தின் உடுப்பில் உள்ள ஸ்ரீகிருஷ்ண மாதா கோயிலில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வழிபாடு செய்தார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜெபி நட்டா 3 நாள் பயணமாகக் கர்நாடகம் வந்துள்ளார். 

உடுப்பி மற்றும் பேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நட்டா உரையாற்றுவார் என பாஜக தெரிவித்துள்ளது. மங்களூருவில் சிக்கமங்களூருவில் இருசக்கர பேரணியில் அவர் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது, நட்டா சிருங்கேரி மடத்திற்கும் செல்கிறார்.

நிகழவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மாநிலத்தில் உள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டத்திலும் நட்டா கலந்துகொள்கிறார்.

கர்நாடகா நீண்ட காலமாக பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது என்பதும், தென்னிந்தியாவில் அவர்களின் தனிப்பெரும் பயணமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.