இந்தியா

தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான்; கேசிஆர் தலிபான் - ஒய்.எஸ்.ஷர்மிளா கடும் விமரிசனம்!

தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும் கேசிஆர் தான் தலிபான் என்றும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடுமையாக விமரிசித்துள்ளார். 

DIN

தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும் கேசிஆர் தான் தலிபான் என்றும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடுமையாக விமரிசித்துள்ளார். 

ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தெலங்கானா மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளும் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். 

நேற்று மஹபூபாபாத் பகுதியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலங்கானா என்றும் சந்திரசேகர் ராவ்(கேசிஆர்)தான் தலிபான் என்றும் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் கேசிஆர் ஒரு சர்வாதிகாரி என்றும் தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு இல்லை, மாறாக, கேசிஆர் அரசியலமைப்புதான் இருக்கிறது என்றார்.

மஹபூபாபாத் எம்எல்ஏ பனோத் ஷங்கர் நாயக்கின் சட்டவிரோத நில ஒப்பந்தங்கள் குறித்து கேள்வி எழுப்பிய ஷர்மிளாவை, நாயக் விமரிசித்துள்ளார். இதற்கு பதில் அளித்துப் பேசியதற்காக ஷர்மிளாவை நேற்று தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது குறித்துப் பேசிய ஷர்மிளா, 'கேசிஆர் என்னைப் பார்த்து பயப்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனது நடைப்பயணம் 3,000 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ளது. ஆரம்பம் முதல் கே.சி.ஆர். தரப்பினர் இதை முறியடிக்க முயன்று வருகின்றனர். ஆனால் முடியவில்லை. 

தெலங்கானாவில் பெண்கள் மதிக்கப்படுவதில்லை. நான் அரசியலுக்கு வந்து நடைப்பயணம் தொடங்கியதில் இருந்து ஆளும் கட்சித் தலைவர்கள் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமரிசிக்கின்றனர். மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT