இந்தியா

மேகாலயத்தில் வேட்பாளர் மரணம்: ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

மேகாலயா சட்டபேரவைத் தேர்தலில் சோஹியோங் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மேகாலயா சட்டபேரவைத் தேர்தலில் சோஹியோங் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், சோஹியோங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் உள்துறை அமைச்சர் எச்டிஆர் லிங்டோ களமிறக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்த லிங்டோ உயிரிழந்தார். இவரின் மறைவை தொடர்ந்து, சோஹியோங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மேகாலயா தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும், இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 59 தொகுதிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT