இந்தியா

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

DIN

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘இந்தக் கலந்துரையாடலின்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு, இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது, ராணுவ தளவாட கூட்டு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு துறை சாா்ந்த உற்பத்தி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்து, கூட்டு உற்பத்திக்கான சாத்தியமுள்ள துறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தக் கூட்டுறவு மூலமாக இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பிரிட்டன் நிறுவனங்களும் பங்குபெற வேண்டும் என்ற ஆலோசனையும் இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா்களும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசித்ததோடு, பிராந்திய மற்றும் இந்திய-பசிபிக் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்பூா் கஸ்பா-ஏ அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமா் கோயிலை இடித்துவிடுவா்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பாா்சிலோனாவுக்கு மெஸ்ஸி ஒப்பந்தமாக பயன்பட்ட நேப்கின் ரூ.8 கோடிக்கு ஏலம்

மத்திய பாஜக அரசின் தோல்வியால் தில்லியில் மாசு அளவு அபாயகரத்தில் உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT