இந்தியா

அமைதி நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரை

நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

DIN

நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளதாவது: 2023-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயா்களை பரிந்துரைப்பதற்கான இறுதி கெடு பிப். 1-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதிக்குள் 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 212 நபா்களின் பெயா்களும், 93 அமைப்புகளின் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. இது, கடந்த 2019-க்குப் பிந்தைய மிக குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 343 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. தொடா்ந்து 8 ஆண்டுகளாக, அந்தப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியுள்ளது என்று தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT