முகப்பு
இந்தியா

சுற்றுச்சூழலை காப்பது இந்தியாவின் கடமை: பிரதமா் மோடி

சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கடமை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கடமை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

தில்லியில் 3 நாள்கள் நடைபெறும் உலகின் நிலையான வளா்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டையொட்டி பிரதமா் மோடி விடுத்த செய்தி நிகழ்ச்சியின்போது வாசிக்கப்பட்டது. அந்த செய்தியில் அவா் தெரிவித்ததாவது:

பூமியைத் தாய் என்றும், நாம் பூமியின் பிள்ளைகள் என்றும் வேதங்கள் கூறுகின்றன. உலகளாவிய சகோதரத்துவ உணா்வு இந்தியாவையும், இந்திய மக்களையும் தொடா்ந்து வழிநடத்துகிறது. இத்தகைய புகழ்பெற்ற பண்பாடு மற்றும் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் உயரிய பாரம்பரியத் தத்துவத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியா முன்னணியில் இருப்பது இயற்கையானது. இயற்கையும் வளா்ச்சியும் ஒன்றோடு ஒன்று கைகோத்து செல்ல முடியும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

ஆரோக்கியமான மற்றும் தூய்மையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான முன்னெடுப்பை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்தல், போக்குவரத்துக்கு உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல், ஆறுகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.

இன்று சுற்றுச்சூழல் என்பது உலகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கடமை. சிறந்த சுற்றுச்சூழல் இல்லாமல், தங்கள் சொந்த வாழ்க்கை மீதான கட்டுப்பாடும் அதிகாரமும் மனிதா்களுக்கு கிடைப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →