முகப்பு
இந்தியா

தீவிரவாத அச்சுறுத்தல்: இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சட்டம் ஒழுங்கு நிலையைப் பராமரிக்க அதிக கவனத்துடன் இருக்குமாறு இஸ்லாமாபாத்தின் ஆய்வாளர் அக்பர் நசீர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

அவர் பிறப்பித்த உத்தரவில், 

இஸ்லாமாபாத்தில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் அந்தந்த பகுதியில் இருக்குமாறு அறிவுறுத்தினார். பணியில் இருக்கும் அதிகாரிகள் முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் இருக்கவேண்டும் மற்றும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் சந்தேகத்திற்கிடமான நபர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். மேலும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மேலும், சிவப்பு மண்டலங்கள் மற்றும் தூதரக பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும். நம்பர் பிளேட் மற்றும் டின்ட் கண்ணாடிகள் கொண்ட வாகனங்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு மத்தியில், தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மீண்டும் இஸ்லாமாபாத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →