கோப்புப் படம் 
இந்தியா

ராஜஸ்தானில் ஆசிரியர் தேர்வு வினாத் தாள் கசிவு: மூளையாக செயல்பட்டவர் கைது

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

DIN

ராஜஸ்தானில் ஆசிரியர் பணிக்கான தேர்வுத்தாள் கசிந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 ஆம் நிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த தோ்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால், தோ்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் இந்த தேர்வு கடந்த மாதம் 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது அம்மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இருப்பினும் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பூபேந்திர சரண் தலைமறைவானார்.

சரண், தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றியதால் அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பூபேந்திர சரணை பற்றிய தகவல் தெரிவிப்பபருக்கு ரூ.1 லட்சம் பரிசும் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பூபேந்திர சரண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டதாக ராஜஸ்தான் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். 

கடந்த 6 நாட்களாக பெங்களூருவில் முகாமிட்டு சரண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரணை, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்த காவல்துறையினர் பின்னர் விசாரணைக்காக உதய்பூர் அழைத்து வந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைவுகள்... சுதா

கலைமாமணி விருது பெற்ற திரைக் கலைஞர்கள்! | Tamil Cinema | TNGovt | Award

ஆஸ்திரேலியாவில் சிறியரக விமானம் விபத்து: 3 பேர் பலி

என்ன சுகம் பாடல்!

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT