இந்தியா

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

DIN

கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், தில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. 

தில்லி உயர்நீதிமன்றத்தை நாடாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT