அமித் ஷா 
இந்தியா

காரில் இளம்பெண் இழுத்துச் செல்லப்பட்ட விவகாரம்! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தில்லியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குக் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறை ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

தில்லியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குக் காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறை ஆணையருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கி செல்லும் காா் ஒன்றில், பெண் ஒருவா் சிக்கி சாலையில் இழுத்துச் செல்லப்படுவதாகக் காவல் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தக் காரை காவல் துறையினா் சிறைப்பிடித்தனா். அதில் சிக்கிய பெண் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில், உயிரிழந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனம் மீது காா் மோதியுள்ளது. அவ்வேளையில் எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

இந்த சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 

இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் வினய் சக்சேனாவின் இல்லத்தின் முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பாஜவினர் என்றும், அவர்கள் காவல் துறையால் பாதுகாக்கப்படுகின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன் எதிரொலியாக, இளம்பெண் மரண விவகாரத்தில் விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய ஆணையருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT