முகப்பு
இந்தியா

நெடுஞ்சாலையில் தலை நசுங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலைப் பகுதியில் தலை நசுங்கிய நிலையில், பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:36 PM
கோப்புப் படம்
பகிர்:


கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலைப் பகுதியில் தலை நசுங்கிய நிலையில், பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திங்கள்கிழமை அதிகாலை உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கிழக்கு பெரிபரல் நெடுஞ்சாலையில், தலை நசுங்கிய நிலையில், ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரணமடைந்த பெண்ணின் தலைப் பகுதி, வாகனத்தின் சக்கரம் ஏறி நசுங்கிய நிலையில், பெண்ணின் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், பெண்ணின் வயது சுமார் 30 முதல் 35 வரை இருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் அடையாளம் காணும் முயற்சியிலும், உடல்கூறாய்வு செய்து, மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சாலை விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்தாரா? தற்கொலை அல்லது கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு கொண்டு வந்து வீசப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →