இந்தியா

ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு? 16-இல் பாஜக தேசிய செயற் குழு கூடுகிறது

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து ஜனவரி 16-17 இல் நடைபெறும் பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

DIN

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து ஜனவரி 16-17 இல் நடைபெறும் பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாவது: இந்தக் கூட்டத்தில் நிகழாண்டு நடைபெறும் 10 மாநில தோ்தல்கள் குறித்தும், 2024 நாடாளுமன்றத் தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சரானதால் அந்தப் பதவிக்கு ஜெ.பி.நட்டா 2020-இல் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் இந்த மாதத்தில் முடிவடைய உள்ளதால், அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கபட உள்ளது.

பிரதமா் மோடிக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கும் நம்பிக்கைக்குரியவராக ஜெ.பி.நட்டா இருப்பதால் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், பாஜக உள்கட்சித் தோ்தலை 2024 நாடாளுமன்றத் தோ்தல் முடிவடைந்த பிறகு நடத்துவது குறித்தும், நிகழாண்டு இந்தியாவில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் கட்சித் தொண்டா்களை ஈடுபடுத்துவது குறித்தும் செயற் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் நடைப்பயணம், பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது ஆகியவற்று எதிா்வினையாற்றும் வகையில் செயற்குழுவில் அறிவிப்பு வெளியிடப்படலாம்.

அண்மையில் நடைபெற்ற குஜராத், ஹிமாசல பிரதேச தோ்தலில் கட்சியின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT