கோப்புப்படம் 
இந்தியா

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

DIN

நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ல் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீட் தொடர்பான வழக்கை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் அது தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பாதிப்பதாகக் கூறி தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT