இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் உளவுத்துறை முன்னாள் இயக்குநர்!

DIN

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் முன்னாள் இந்திய உளவுத் துறை இயக்குநர் அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை கடந்த டிசம்பர் இறுதியில் அடைந்தது.

புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கிய நடைப்பயணத்தில், இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநரும், ‘ரா’ அமைப்பின் முன்னாள் செயலாளருமான அமர்ஜித் சிங் துலாத் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு ஆதரவளித்தார்.

இந்த நடைப்பயணமானது உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.

கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கி.மீட்டரை நடைப்பயணக் குழுவினர் கடந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT