மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

குஜராத் தேர்தல் தோல்வி: மதிப்பீடு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மதிப்பீடு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்  

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மதிப்பீடு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். 

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 

காங்கிரஸ் கட்சி வெறும் 17 இடங்களை மட்டும் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் சமாஜவாதி கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வென்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்ததையடுத்து அதற்கு பொறுப்பேற்று குஜராத் மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரகு சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் குஜராத் தேர்தல் முடிவுகளை மதிப்பீடு செய்ய 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இந்தக் குழு குஜராத் தேர்தல் குறித்து மதிப்பீடு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் நிதின் ராவத் தலைமையிலான இந்த குழுவில் உறுப்பினர்களாக ஷகீல் அகமது கான் மற்றும் சப்தகிரி சங்கர் உலகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT