முகப்பு
இந்தியா

தலைமைச் செயலாளர்கள் மாநாடு: பிரதமர் மோடி நாளை பங்கேற்பு

தில்லியில் நடைபெறும் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:38 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

தில்லியில் நடைபெறும் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளார்.

மத்திய அரசு - மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் பஞ்சாபில் முதல் மாநாடு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது மாநாடு தில்லியில் இன்றுமுதல் ஜனவரி 7 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், மத்திய அரசு அதிகாரிகள், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள் என மொத்தம் 200 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில், நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மூன்று நாள் மாநாட்டில் மாநிலங்களுடன் இணைந்து பொருளாதார வளர்சியை அடைவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், ஜி20 மாநாட்டில் மாநிலங்களின் பங்குகள், சிறு, குறு வர்த்தகங்கள், உள்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.