இந்தியா

பிரியமான சோனு சூட்.. நீங்களே இப்படி செய்யலாமா? கண்டிக்கும் ரயில்வே

DIN

ஹிந்தி நடிகர் சோனு சூட், ஓடும் ரயிலில், பயணிகள் ஏறி, இறங்கும் நுழைவாயிலில் உட்கார்ந்தபடி பயணிக்கும் விடியோவை வெளியிட்டிருப்பதற்கு வடக்கு ரயில்வே கடுமையாக விமரிசித்துள்ளது.

ஓடும் ரயிலில் படிகட்டில் அமர்ந்து பயணிப்பது மிகவும் அபாயகரமானது என்று, வடக்கு ரயில்வே, சோனு சூட்டின் விடியோவை டிவிட்டர் பக்கத்தில் இணைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம், தனது டிவிட்டர் பக்கத்தில் ஓடும் ரயிலின் நுழைவாயிலில் அமர்ந்தபடி பயணிக்கும் விடியோவை சோனு சூட் பகிர்ந்திருந்தார்.

இந்த விடியோ குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ள வடக்கு ரயில்வே, பிரியமான சோனு சூட் அவர்களே, இந்த நாடு மட்டுமல்ல உலகின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரியாக (ரோல் மாடலாக) உள்ளீர்கள்.  ரயில் படிகட்டில் அமர்ந்து பயணிப்பது மிகவும் அபாயகரமானது. இந்த விடியோ மூலம் உங்கள் ரசிகர்களுக்கு ஒரு தவறான தகவலை நீங்கள் அளிப்பது போல் ஆகிவிடும். தயவுகூர்ந்து இதனைச் செய்ய வேண்டாம். 

மிகவும் நிம்மதியான பாதுகாப்பான பயணத்தை அனுபவியுங்கள் என்று பதிவிட்டுள்ளது.

அதேவேளையில், மும்பை ரயில்வே காவல்துறை ஆணையர் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் சினிமாவுக்கு வேண்டுமானால் தேவைப்படும். ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு தேவைப்படாது. பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள் என்று பகிர்ந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT