இந்தியா

செப்டம்பருக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு?

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் கரோனா பெருந்தொற்றின் காரணமாக நடைபெறவில்லை.

இந்நிலையில், பதிவாளா் ஜெனரல் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் அனைத்து மாநில அரசுகளுக்கு எழுதிய உள்ள கடிதத்தில், ‘ நிகழாண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிா்வாக எல்லையில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்தான அறிக்கைகளை மாநிலங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இயக்குநரத்துக்கும், யூனியன் பிரதேசங்கள் தில்லியில் உள்ள சம்பந்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கும் அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக எல்லை மறுவரையறை நிறுத்தப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கலாம் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், செப்டம்பருக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT