இந்தியா

ராகுலை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்துவது ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கமல்ல: ஜெய்ராம் ரமேஷ்

DIN

ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப்பயணம் முன்னெடுக்கப்படவில்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களையும் சென்றடைந்து  தற்போது ஹரியாணாவின் கர்னலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  கர்னலில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப்பயணம் முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அவர் பேசியதாவது: பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்த முன்னெடுக்கப்படவில்லை. ஒற்றுமை நடைப்பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் சித்தாந்த ரீதியிலான நடைப்பயணம். இது ஒருவரின் தனிப்பட்ட நடைப்பயணம் அல்ல. இந்த ஒற்றுமை நடைப்பயணத்தில் பொருளாதார சமத்துவமின்மை, சமூகத்தை பிளவுப்படுத்துதல் மற்றும் அரசியல் சர்வாதிகாரம் ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT