முகப்பு
இந்தியா

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடக்கம்!

பிகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இன்றுமுதல் முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

பிகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இன்றுமுதல் முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பிகாரில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அனுமதி கோரும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டல் நடத்தப்பட்டது. கடந்த ஜூன் முதல் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. 

அமைச்சரவையில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார். 

அந்தவகையில் இன்றுமுதல் (ஜன.7) பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி தனியாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இரண்டு கட்டங்களாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்படடுள்ளது. அதன்படி முதல்கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடத்தப்படும். இரண்டாம் கட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.

எண்ம (டிஜிட்டல்) முறையில் கணக்கெடுக்கப்படும் தரவுகள் சேமிக்கப்படும். ஸ்மார்ட் போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பஞ்சாயத்து முதல் மாவட்ட அளவில் தரவுகள் வகைப்படுத்தப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஓபிசி பிரிவினரை துல்லியமாக கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →