கடுமையான குளிர் அலை காரணமாக பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக ஹிமாச்சல், தில்லி, ஹரியாணா, பஞ்சாப், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. குறைந்தபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் அளவு பதிவானது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.