முகப்பு
இந்தியா

விபத்தில் சிக்கிய ஹரியாணா உள்துறை அமைச்சரின் கார்

ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் கார் கடந்த 3 வாரங்களில் இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் கார் கடந்த 3 வாரங்களில் இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் அனில் விஜ். இவருடைய கார் குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் இன்று சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மீது டிரக் திடீரென மோதியது. 

இதனால் அமைச்சரின் காரை பின் தொடர்ந்து வந்த பாதுகாப்பு வாகனம், அமைச்சர் கார் மீது மோதியது. இதில் அவருடைய கார் லேசாக சேதமடைந்தது. எனினும் இந்த விபத்தில் அமைச்சர் அனில் விஜ்-க்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. 

தனது சொந்தத் தொகுதியான அம்பாலா கான்ட் பகுதியில் இருந்து குருகிராமுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அமைச்சரின் கார் பழுதடைந்த அதே இடத்திற்கு அருகில் இந்த சம்பவமும் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →