புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற எண்ம இந்தியா விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு. 
இந்தியா

இந்திய தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்கள்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

இந்திய தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, மென்பொருள் மற்றும் வன்பொருளில் உலகளாவிய அதிகார மையமாக நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

DIN

இந்திய தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, மென்பொருள் மற்றும் வன்பொருளில் உலகளாவிய அதிகார மையமாக நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 7-ஆவது டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி கெளரவித்து அவா் பேசியதாவது:

டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களையும் எண்ம (டிஜிட்டல்) இந்தியா இயக்கத்தின் நம்பிக்கையை நிறைவடையச் செய்ய அங்கீகரித்து, ஊக்குவிக்கிறது.

இந்த விருதுகள், எண்ம ஆளுகையை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் மக்களின் திறனை வெளிக் கொண்டு வந்து, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக இந்தியாவை மாற்றுவதற்கான முதல் படியாகும்.

பொதுமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தரவுப் பகிா்வு தளம் முதல் எளிதாக வணிகம் செய்வது வரை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் பலதரப்பட்ட புதுமைகளை எண்ம இந்தியாவில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் நாட்டு திறமைகளின் மதிப்பை உலக அளவில் உணா்த்துவதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பான பணியைச் செய்துள்ளன. சமூக நீதி டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்திய தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, மென்பொருள் மற்றும் வன்பொருளில் உலகளாவிய அதிகார மையமாக நாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“House No: 0! ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்! சிரிக்காதீங்க!” ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

SCROLL FOR NEXT