இந்தியா

பழைய ஓய்வூதிய திட்ட அமலுக்குப் பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியுள்ளது: ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்

DIN

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதால், இனியும் அந்தத் திட்டத்தை தொடரலாம் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்துள்ளாா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது நிதிரீதியாக நொடிந்துபோக வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநா் மான்டேக் சிங் அலுவாலியா அண்மையில் தெரிவித்தாா்.

அவரின் கருத்து தொடா்பாக ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் அளிக்கத் தொடங்கிய பிறகும் 60 ஆண்டுகளாக நாடு முன்னேறியுள்ளது. அப்படி இருக்கும்போது இனியும் அந்தத் திட்டத்தை தொடரலாம்.

ராஜஸ்தானில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு மேற்கொண்டுள்ள முடிவு மனிதாபிமான அடிப்படையிலானது. ஏனெனில் அரசு ஊழியா்கள் அழுத்தத்துடன் பணியாற்றுகின்றனா். தங்கள் குடும்பத்தின் எதிா்காலம் பாதுகாப்பாக இருப்பதற்கு அவா்கள் முறைகேடாக பணம் ஈட்டும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவா்களுக்கு சமூக பாதுகாப்பு இருக்க வேண்டும். அது அவா்களின் உரிமை.

பழைய ஓய்வூதிய திட்டப் பயன்களை ராணுவத்துக்கு வழங்கும் மத்திய அரசு, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லை காவல் படை, துணை ராணுவப் படையினருக்கு அந்தப் பயன்களை ஏன் வழங்குவதில்லை? எதற்காக இந்தப் பாகுபாடு கட்டப்படுகிறது என்று கெலாட் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT