இந்தியா

3,700 இந்திய அணைகளுக்கு இந்த நிலை ஏற்படும்: ஐ.நா. எச்சரிக்கை

DIN


புது தில்லி: இந்தியாவில் இருக்கும் சுமார் 3,700 அணைகள், வரும் 2050ஆம் ஆண்டுகளில், வண்டல் மண் கலப்பினால் அதன் 26 சதவீத நீர்தேக்கும் திறனை இழந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவ், மத்திய நீர் ஆணையம், 2015ஆம் ஆண்டு, நாட்டில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பழைமையான மிகப்பெரிய 141 அணைகள், தனது நீர்த்தேக்க அளவில் 30 சதவீதத்தை இழந்துவிடும் என்று தெரிவித்திருந்தது.

உலகம் முழுவதும் சுமார் வண்டல் மண் காரணமாக ஏற்கனவே 50,000 மிகப்பெரிய அணைகள் தங்களது நீர்த்தேக்க அளவில் 13 - 19 சதவீதம் அளவுக்கு இழந்துவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மைய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உலகளவில் இருக்கும் அணைகளின் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டுள்ளது.

பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை வழங்குவது என ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. இதன் நீர்த்தேக்க அளவு குறைவது என்பது ஒரே நேரத்தில் இவை அனைத்தையுமே பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

10ம் வகுப்பு: மறுதேர்வு, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் எப்போது?

10ம் வகுப்பு தேர்வு முடிவு: 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: அரியலூர் முதலிடம்.... முதல் 5 மாவட்டங்கள்!

SCROLL FOR NEXT