இந்தியா

இந்தியா - ஜப்பான் கூட்டுவிமான பயிற்சி: வரும் 12-ம் தேதி முதல் தொடக்கம்!

இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு  'வீர் கார்டியன்-2023' எனும் போர் விமான பயிற்சி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

DIN



புதுதில்லி: இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு 'வீர் கார்டியன்-2023' எனும் போர் விமான பயிற்சி வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக  'வீர் கார்டியன்-2023' எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் வரும் 12 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 

இதில், இந்திய விமானப் படையின் 4 சு-20 எம்.கே.ஐ ஜெட் விமானங்களும், 2 சி-17 விமானங்களும் ஒரு ஐ.எல்-78 விமானமும், ஜப்பான் சார்பில் 4 எப்-2 மற்றும் 4 எப்-15 போர் விமானங்களும் பங்கேற்கின்றன. 

இந்த 'வீர் கார்டியன்' கூட்டுப் பயிற்சியானது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நெருக்கமான வான் பாதுகாப்பு ஒத்துழைப்பின் வழிகளை மேலும் ஆழப்படுத்துவதில் அடுத்தகட்ட நடவடிக்கை என இந்திய விமானப்படை கூறியுள்ளது. 

இப்பயிற்சியில் இருதரப்பு நிபுணர்களும் பல்வேறு அம்சங்களில் தங்களின் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள
ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்தோ, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா- ஜப்பான் பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் விதமாக இந்த விமானப் பயிற்சி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

SCROLL FOR NEXT